செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உள் கட்சியை பொறுத்த வரைக்கும் நீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி குறிப்பிடுவது, அந்த வழக்குக்கு தடையாக இருக்கும். தவறானது, எதிர்க்கட்சி என்ன வேண்டும் என்றாலும், பேசுவார்கள். நாங்க தான் சொன்னோம்ல எதுக்காக டெல்லி போனோம்னு.
இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு நன்மை கிடைக்கல. எந்த ஒரு திட்டமும் கொண்டு வரல. இன்றைக்கு கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம் என்பது நீண்ட கால திட்டம். விவசாயிகளும், பொதுமக்களும், எதிர்பார்க்கின்ற திட்டம். வறண்ட பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்றுகின்ற பொழுது தடையில்லா நீர் கிடைக்கும். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நான் அவர்களிடத்திலே இந்த கோரிக்கை வைத்திருக்கிறேன்.
ஏற்கனவே பிரதமரை சந்திக்கின்ற போதெல்லாம் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை நினைவூட்டும் விதமாக மாண்புமிகு உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாரத பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
தமிழகத்தில் பரவும் காய்ச்சலை தடுப்பது அரசனுடைய கடமை. இது ஒரு எளிதாக பரவக்கூடிய காய்ச்சலாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே அரசு விழிப்போடு இருந்து மக்களை காக்க வேண்டும். அதுவும் குழந்தைகளை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ குழு இதற்கு ஆராய்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.