திருப்பத்தூர் அருகே தரமான சாலையை அமைக்க கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அவர்களது கிராமத்திற்கும், நகரத்திற்கும் சென்றுவர இடைப்பட்ட கரடுமுரடான சாலையை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து ஒழுங்கான சாலையை அமைக்க கோரி பலமுறை நடத்திய போராட்டங்களுக்கு பின் 1 ¼ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதில் முறைகேடு செய்து தரமற்ற சாலை அமைத்து வருவதாக வந்த தகவலையடுத்து சாலை பணி நடைபெறும் இடத்திற்கு சென்ற பொதுமக்கள் தரமான சாலை அமைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின் இதுகுறித்து தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான சாலை அமைப்போம் என்று உத்தரவிட்டதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.