Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார்.

கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட அடிப்படையில் மத்திய அரசாங்கத்தோடு சேர்ந்து கூகுள் நிறுவனம் பணிபுரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை, அவருடன் ஆலோசித்திருக்கிறார்.

இந்திய நாட்டில் கூகுள் நிறுவனம் செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய தூதருடன் ஆலோசனைகள் நடந்தது. அதற்காக அவருக்கு நன்றி. டிஜிட்டல் திட்டத்திற்கு எங்கள் நிறுவனம் எப்போதும் ஆதரவு தரும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |