Categories
சினிமா

ஒரு நாளை இனிதாக்க ஒரு துளி காதல்!…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட டுவிட் பதிவு…. வைரல்….!!!!

கடந்த 1989ம் வருடம் வெளியாகிய புதியபாதை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து இவர் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், ஒத்த செருப்பு ஆகிய பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் அவர் தன்னுடைய படங்களில் வித்யாசமான புதிய முயற்சிகளை செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார். அவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய இரவின் நிழல் படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

இயக்குனராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, ஒரு நாளை இனிதாக்க ஒருதுளி காதல் போதுமானது. அந்த காதல் ஒருவர் மீதொருவர் வைப்பதாக மட்டுமின்றி ஒரு மையப் புள்ளியின் மீது இருபார்வைகள் வைக்கும் காதலாகக் கூட இருக்கலாம். அந்த மையத்தின் பெயர் சினிமா ஆகும். பெயர் குறிப்பிடாமல் என் சினிமாவுக்கு…சினேகமுடன் என எழுதி தி.ஜா-தொடரும் என குறிப்பிட்டு நடிகர் கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |