Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாமதம் கூடாது….. உடனே சொல்லுங்க….. கோவை விதை சான்று இணை இயக்குனர் அறிவுரை….!!

விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதை பரிசோதனைக்கான  பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை விதை சான்று இணை இயக்குனர் நேரில் சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த விதை வகைகள், 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு  அவற்றிற்கான மருத்துவ பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதன்பின் விதைகளுக்கான ஈரப்பதம் வெப்பநிலை அதற்கான வெளிச்சத்தின் அளவு உள்ளிட்டவற்றையும் அவர் கேட்டறிந்தார். பின் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விதை பரிசோதனை செய்யப்பட்ட  பின் வரும் முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் உயர் விளைச்சலை ஏற்படுத்த முடியும். விதையின் தன்மையை உணர விதையின் தன்மை மற்றும் அதன் விளைச்சலை உணர விதை பரிசோதனை முடிவுகள் அதன் ஆய்வுகள் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |