Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன்…? இறந்த மகளை நினைத்து உருகும் பாடலாசிரியர்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன். கவிஞரும் பாடலாசிரியருமான இவர் வரவிருக்கும் பிசாசு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்த சூழலில் இவரது மகள் தூரிகை அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலன் தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏடிஎம் காலனியில் வசித்து வருகின்றார். இவரது மகள் தூரிகை பீயிங் உமன் எனும் இதழையும் திலேபிள் தீரா என்னும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவரின் திடீர் மரணம் திரைத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மகள் இறந்து ஓரிரு வாருங்கள் ஆகும் சூழலில் பிரபல வார இதழில் தன்னுடைய மகள் பற்றி உருக்கமான கவிதை எழுதியுள்ளார் கபிலன். அதில் எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன்..!

எங்கே போனான் என தெரியவில்லை அவள் காலனி மட்டும் என் வாசலில்..! மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா.. அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்..? அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது அவளே என் கடவுள்..! குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கி சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி. யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதில் அளிக்கிறாள். கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்..! மகள் தூரிகை நினைத்து கபிலன் எழுதி இருக்கின்ற இந்த கவிதைகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |