Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்போது…? விரைவில் வெளியாகும் முக்கிய தகவல்..!!!!!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவு படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன்படி பெருந்திரல் விரைவு அமைப்பு எனப்படும் MRTS போக்குவரத்து வசதிகளை கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பொறுப்பு பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வரைவு தயார் செய்திருக்கின்றனர். இது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் அளிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையில் எந்தெந்த பகுதிகளில் புதிய போக்குவரத்து வசதிகளை கொண்டு வரலாம் வழித்தடம் அதற்கான செலவு என்ன மாதிரியான போக்குவரத்து வசதிகளை செயல்படுத்தலாம் போன்ற விவரங்கள் இடம்பெறும். இதனை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் போது ஒட்டுமொத்த டிசைன், ரயில் நிறுத்தங்கள், செலவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவு பயணிகள் வரத்து போன்ற விவரங்களும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு முக்கியமான ஒரு விஷயத்தை முன்மொழிந்து உள்ளது அதாவது டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் மெட்ரோ ரயில் அல்லது மெட்ரோ நீயோ திட்டங்களை செயல்படுத்தலாம். ஏனென்றால் இவற்றிற்கான கட்டுமான செலவு மெட்ரோ ரயில் சேவை விட பெரிதும் குறைவு மேலும் எளிதில் செயல்படுத்த முடியும் பொது மக்களுக்கு குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ள முடியும். அப்படி பார்த்தால் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது. இந்த நிலையில் முதற்கட்டமாக ஒத்தை கடை முதல் திருமங்கலம் வரையிலான வழித்தடங்களில் எம் ஆர் டி எஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரப்போவது உறுதி மேலும் இது தொடர்பாக நல்ல செய்திகள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |