தெலுங்கானா மாநிலத்தில் 2022-23 ஆம் நடப்பு நிதி ஆண்டின் நாட்காட்டியின் படி மொத்தம் 230 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக ஜூலை 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக 7 நாட்கள் வரை கல்வி கற்பித்தலில் மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் முன்னதாக மாநில அரசு அனைத்து பள்ளிகளுக்கும் தசராவை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை மற்றும் அக்டோபர் 10 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் மொத்தம் 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள வேலை நாட்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காக அந்த முடிவை மாநில அரசு மாற்றி உள்ளது. மேலும் முன்னதாக அறிவித்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு பதிலாக அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மற்றும் மற்ற வேலை நாட்களை 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஈடு செய்து கொள்ள திட்டமிடபட்டுள்ளது