Categories
சினிமா

தனுஷ் படத்தில் இணைந்த முக்கிய நடிகர்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் “நானே வருவேன்”. இவற்றில் நடிகர் தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச் சந்திரன் நடிக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. வரலாற்று பாணியில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இவற்றில் டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் மற்றும் மகளிர் மட்டும், சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், சுழல் உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதிதா சதிஷ் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அடுத்தடுத்து நடிகர்களை படக்குழு களமிறக்கி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஜான் கொக்கன் மற்றும் மலையாளத்தில் கள படத்தின் வாயிலாக பிரபலடைந்த சுமேஷ் மூர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தொடர் அறிவிப்புகளால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |