ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தில் great Indian festival sale-2022 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த great Indian festival sale-ஐ முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் 13 ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஐபோன் 13 விலை குறைந்துள்ளது. இந்த ஐபோன் 13 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை 79,900 ரூபாயாக இருந்தது. அதன்பின் ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஐபோன் 13 விலை 10 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் great Indian festival sale-ஐ முன்னிட்டு ஸ்மார்ட் போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 256 ஜிபி மாடலின் விலை 74,900 ரூபாயாகவும், 512 ஜிபி மாடலின் விலை 99,900 ரூபாயாகவும் இருக்கிறது. இதற்கு இ ரீடைல் மூலம் 14,850 எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக iphone 13 ஃபோனை 41,850 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ரெடினா XDR டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வசதி, A15 பயோனிக் சிப்செட் ஆதரவு, 19 மணி நேர பேட்டரி பேக்கப், 12Mp selfie camera with night mode, 4K Dolby vision HDR recording, 12 MB wide camera, 12 MP ultra wide sensor போன்றவைகள் இருக்கிறது. இதேபோன்று ஐபோன் 12 ஸ்மார்ட் போனை ஆஃபரில் 40,000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த போனின் தற்போதைய விலை 59,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 460ppi pixel Deep, 12000nits brightness, super retina xdr display, ceramic shield, A14 bionic chipset போன்ற வசதிகள் இருக்கிறது.