Categories
உலகசெய்திகள்

“நீ ஒரு போக்கிரி.. நீங்கள் என்னை குளிப்பாட்ட வேண்டாம்”… குளியலறையில் இருந்து தந்தையை வெளியேற்றிய 2 வயது மகள்… வைரலாகும் வீடியோ…!!!!!!

சீனாவில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தன்னை குளிப்பாட்ட வேண்டாம் என தனது தந்தையை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தாயிடம் பாலியல் கல்வி கற்றதால் தந்தையை கடிந்துக் கொண்டு அவரை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய சீன சிறுமியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சீனாவின் தியான்ஸின் நகரத்தைச் சேர்ந்த குவோ என்னும் குடும்ப பெயர் கொண்ட தந்தை தனது இரண்டு வயது மகளுக்கு ஆண் பெண் பாலின வேறுபாடுகள் பற்றி கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனது தாயிடம் அந்த சிறுமி ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றி கேட்டு அறிந்து கொண்டார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை வழக்கம் போல தனது மகளை குளிப்பாட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு அவரது மகளான அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த அந்த சிறுமி குளியலறையில் உள்ள தாழ்வான ஸ்டூலில் அமர்ந்திருக்கிறார்.

தனது தந்தையிடம் நீ ஒரு போக்கிரி  நீங்கள் என்னை குளிப்பாட்ட வேண்டாம் எனது டீ ஷார்ட்டையும் ஷார்ட்டையும் நீங்கள் கழற்ற வேண்டாம். எனக் கூறி அழுதுள்ளார். அதன் பின் மகளின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த தாய் தனது மகளை சமாதானப்படுத்தினார். தனது கணவரை குளியலறையில் இருந்து வெளியேற்றிவிட்டு தனது மகளை குளிப்பாட்டி உள்ளார். இந்த சம்பவம் பற்றி அந்த தாய் பேசும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி பாடப் புத்தகத்தில் இருக்கும் தகவல்களை மகளுடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது நீ ஒரு பெண் அதனால் மற்ற ஆண்கள் என் உடலை தொட அனுமதிக்க கூடாது அப்போதுதான் உன்னை நீ பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தேன். அதனால் தன் தந்தை கூட தன்னை தொடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கின்றார் என கூறியுள்ளார். மேலும் சிறுமியின் நடத்தையே சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |