Categories
சினிமா

அடேங்கப்பா!….. ஹைதராபாத்தில் சொத்துக்கள் வாங்கும் நயன்தாரா….. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் சினிமா துறையில் அடியை எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆன பிறகு இன்னும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு கூடுகிறதே தவிர குறையவில்லை. தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக நயன்தாரா இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகும் எப்போதும் போல அதிக படங்கள் கைவசம் வைத்து பிசியான நடிகையாகவே வலம் வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் ஏற்கனவே அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலங்களை வாங்கி போட்டு உள்ளார். கேரளாவில் சொத்துக்கள் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஜிப்ளி ஹில்ஸ் பகுதியில் 2 பங்களாக்களை அவர் வாங்கி இருப்பதாக தெலுங்கு இணையதளத்தில் தகவல் பரவி உள்ளது. ஒவ்வொரு வீட்டின் விலை ரூ.15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஒரு புறம் சொத்துக்கள் வாங்குவதோடு இன்னொரு புறம் வியாபாரத்திலும் முதலீடு செய்து வருகிறார். எதிர்காலத்தில் சினிமாவை விட்டு விலக நேர்ந்தால் வியாபார துறையில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பெரிய அளவில் வியாபாரங்கள் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.

Categories

Tech |