Categories
மாநில செய்திகள்

டெல்லிக்குச் சென்றதற்கு இதுதான் காரணம்….. அப்படியே ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது தான் தற்போது ஹாட் பிட் ஆக பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்ட வேண்டிய சரியான நேரத்தில், சரியான இடத்தில் எடுத்துரைக்க வேண்டியது ஜனநாயக கடமை. அதன்படி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் நிலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் உட்கட்சி பிரச்சனை குறித்து அரசியல் ரீதியாக வேறு விஷயங்களும் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வுக்காகவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார் என்று அரசியல் விமர்சனங்கள் பேசுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் டெல்லி சென்று கோவை விமான நிலையம் வந்து இறங்கி எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து முக்கியமான விஷயம் பேசினேன். கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தேன். அதனை தொடர்ந்து திமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் திராவிட மாடல். ஆ.ராசா கீழ்தரமான மற்றும் இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

அவர் குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தையை அவரது கட்சியின் தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கு பொருந்துமா என்று கேட்டிருந்தேன். இன்னும் அவரது கட்சித் தலைவர் உரிய பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இபிஎஸ், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி பேசினால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும். டெல்லியில் ஒட்டச்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது. மேலும் திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறாமல் இருப்பது குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைக்க தான் டெல்லிக்கு சென்றேன். தமிழகத்தில் காய்ச்சல் பரவாயில்லை தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவக் குழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |