புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அபிராமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வினு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் மனோஜின் தயார் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் தனது மகளுக்கு தொந்தரவு அளித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அபிராமி செல்போனில் உருக்கமாக பேசிய ஆடியோ வெளியானது. அதில் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மனோஜின் பாட்டியும், அம்மாவும் எங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்பதால் இந்த முடிவை தேடி கொள்கிறேன். எனது சாவுக்கு மனோஜின் அம்மாவும், பாட்டியும் தான் காரணம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் தாலி கட்டிய மனைவிக்கு கணவர் பாதுகாப்பு கொடுக்காததால் மனோஜும் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் மனோஜை கைது செய்தனர். மேலும் நாகேஸ்வரி, கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.