Categories
தேசிய செய்திகள்

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையிலிருந்து உணவு விநியோகம்…. மாவட்ட அதிகாரி பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் ஷஹாரன்பூரில் கபடி வீரா்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் வெளியாகிய வீடியோவில், அம்பேத்கா் விளையாட்டு அரங்கிலுள்ள கழிவறையில் சாப்பாடு, பூரி வைக்கப்பட்டுள்ளதும், அதனை கபடி வீராங்கனைகள் எடுத்துச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இவ்வீடியோவை பா.ஜ.க பிலிபிட் எம்.பி. வருண் காந்தி பகிா்ந்து “இந்திய விளையாட்டுத் துறையிலிருந்து அரசியல்வாதிகளையும் அவா்களின் நிா்வாகிகளையும் நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் “இந்திய வீரா்களை இப்படி கையாண்டால், அவா்கள் எப்படி ஒலிம்பிக்போட்டியில் வெற்றி பெறுவாா்கள்?” என்று கேள்வி எழுப்பினாா். அதன்பின் அந்த மாவட்ட விளையாட்டு அதிகாரி அமினேஷ் சக்சேனாவை பணியிடைநீக்கம் செய்தும், அந்த உணவை சமைத்து வழங்கிய உணவு நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைத்தும் உத்தரபிரதேச விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் நவநீத் சேகல் உத்தரவு பிறப்பித்தார். 300 விளையாட்டு வீரா்களுக்கு 2 சமையல்காரா்கள் நீச்சல் குளத்தின் அருகில் உணவை சமைத்து கழிவறையில் வைத்து பரிமாறியதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அமினேஷ் சக்சேனா தெரிவித்தாா்.

Categories

Tech |