Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே யாரும் நம்ப வேண்டாம்…..! குறுக்கு வழியில் வேலை….. ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை…!!!!!

ரயில்வே தேர்வு வாரியம் ஆனது குரூப் டி கணினி சார்ந்த தேர்வு நடத்துவதற்கு மிகவும் நன் மதிப்பு பெற்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வில் 1.1 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கிறார்கள். 12 மண்டலங்களிக் மூன்றாம் கட்ட கணினி சார்ந்த தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. நான்காம் கட்ட தேர்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த தேர்வில் எந்த வகையிலும் முறைகேடு செய்யாத வகையில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே பணியாளர் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்படுகிறது என தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கணினி வழி தேர்வில் முறைகேடுகள் நடக்காமலிருக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்கள் கண்காணிப்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேர்வுகள் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. அதனால் குறுக்கு வழியில் வேலை வாங்கித்தருவதாக வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |