இந்தியாவில் சேலைக்காக மட்டும் வருடத்திற்கு பெண்கள் 4000 ரூபாய் வரை செலவிடுவதாக டெக்னோபார்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அதில் 25 வயதிற்கு மேற்பட்ட 37 கோடி பெண்கள் ஆண்டிற்கு புடவைகள் வாங்க சராசரியாக 3500 முதல் 4000 வரை செலவிடுகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் பனாரஸ் புடவை, ராஜஸ்தானின் கோட்டா, மத்திய பிரதேசத்தில் சாந்தேரி ரக புடவைகளை அதிகம் விரும்பி வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வரும் 2031 ஆம் ஆண்டில் இந்தியாவில் புடவை அணியும் பெண்களின் எண்ணிக்கை 45.5 கோடியாகவும், 2036 ஆம் ஆண்டில் 49 கோடியாகவும் இருக்கும். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் வட இந்தியாவில் பெண்கள் அதிகமாக இருந்தும் அவர்களின் புடவை அணியும், அதனால் 15 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.ஆனால் நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடிக்கு புடவை வர்த்தகம் நடைபெறுகிறது.குறிப்பாக திருமண மற்றும் பண்டிகை காலங்களில் 41% அளவிற்கு புடவைகளின் விற்பனை அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.