Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

21….. சிவராத்திரி…. என்னென்ன பூஜைகள் எப்போவென்று தெரியுமா….? மிஸ் பண்ணிடாதீங்க…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்  கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட முக்கிய சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மகாசிவராத்திரி தொடங்கிய கோயிலாகவும் இது கருதப்படுகிறது.

சிவனின் அடிமுடி இவையிரண்டையும் திருமாலும் பிரம்மாவும் கணக்கிட முடியாமல் தவித்த போது சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி அளித்த திருநாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.  இதனை உணர்த்தும்விதமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமிக்கு பின் லிங்கோத்பவ சிலையும் இருக்கும்.

இவ்வாண்டு மகா சிவராத்திரி வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 5 மணி முதல் லட்சார்ச்சனை தொடங்கிவிடும். அதன்பின் மாலை 7.30 மணி அளவில் முதல் கால பூஜையும் 11 மணி அளவில் இரண்டாம் கால பூஜையும், 12 மணியளவில் மூன்றாம் கால பூஜையும், லிங்கோத்பவத் சிலைக்கு சிறப்பு பூஜையும், 

பின் அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் நான்காம் கால பூஜையும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலமும் செல்வர். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Categories

Tech |