Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமல் இனி இல்லை.. தொல்லையிலிருந்து விடுபடுங்கள்..அனைத்தையும் குணமாக்கும் அதிசயம்..!!

சளி, இருமல், ஜலதோஷம், நெஞ்சுவலி அனைத்தும் குணமாகும், அதிசயம். வெற்றிலை கஷாயம்…

நம் உடம்பில் எல்லா பகுதிகளிலும் சளி தேங்கி இருக்கும்.  ஜலதோஷம், இருமல் பின் நம் உடலில் எங்கெல்லாம்சளி தேங்கி இருக்கும், அதை எல்லாம் ஒரே நாளில் சரி செய்து விடும்.

இந்த ஒரு கசாயத்தை குடிக்கிறதுனால ஒரே நாளில், மலம் வழியாக சளி வெளியேறி விடும். அந்த அளவுக்கு அது ஒரு கசாயம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யலாம். இந்த ஒரு பொருள் மட்டும் தான் கடையில் வாங்க போகிறோம்.

வெற்றிலை ஜீரண சக்திக்கு ரொம்பவே நல்லது, சாப்பிட்டதுக்கு அப்புறம் வெற்றிலை, நிஜாம் பாக்கு வச்சு போடுவாங்க. அது எதுக்கு போடுறாங்கன்னு கேட்டீங்கன்னா, செரிமானம் ஆக்குவதற்கு, நம்ம சாப்பிட்ட சாப்பாடுசெரிமானம் ஆகுறதுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும்.

அதுமட்டுமில்லை சளிக்கும் இது ரொம்ப பவராக இருக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை வெற்றிலை.  இது போல இரண்டு வெற்றிலை காம்புகளை  பிய்த்து வைத்துக்கொண்டு, சின்ன, சின்ன துண்டுகளாக கட் பண்ணி  எடுத்துக்கணும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி,  நல்லா கொதிக்க விடணும்.  இரண்டே இரண்டு வெற்றிலை மட்டும் கட் பண்ணி அதை  தண்ணீரில்  போடணும்.

ஒரு சின்ன துண்டு இஞ்சி நச்சு போடணும். கால் ஸ்பூன் அளவுக்கு மிளகு, நல்ல பொடியாக்கி அந்த தண்ணீரில் போடா வேண்டும். அதன் பின் மிளகு எடுத்திருக்கும் அளவிலேயே சீரகமும் எடுத்து அதையும் பொடியாக்கி அந்த தண்ணீரில் போடவேண்டும். இவைகளின் அணைத்து சத்துக்களும் தண்ணீர் கொதித்து வரும்பொழுது இறங்கிவிடும்..

கால் டீஸ்பூன் அளவு மல்லிப்பொடி அதாவது தனியாத்தூள் நல்லா தண்ணீர் கொதிச்சு வற்ற வேண்டும். அரை டம்ளராக தண்ணீரை நன்கு வற்றியதும், வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலையில வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடம்பில் எங்கெங்கெல்லாம் சளி இருக்கிறதோ அவை நீங்கி, மலத்தோடு வெளியேறிவிடும்.

Categories

Tech |