சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் சிவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரச குரு(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் மணக்காடு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். மேலும் சிறுவனுக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் அரச குரு வீட்டிலேயே இருந்துள்ளான். இந்நிலையில் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு சிறுவனை வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டில் இருந்த சிறுவன் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குபதிந்த போலீசார் சிறுவனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.