தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் சமூக வலைதளங்களில் படம் பற்றி பேசுவார். இது ரசிகர்களிடைய மிகவும் வைரலானது. அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வீடியோவில் பேசியதாவது, நான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தாலும், வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன். என்னோட தலைவன் சிம்புவிற்காக மட்டும்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். அந்தப் படம் தற்போது வெளியாகிவிட்டது. நான் ரிவ்யூ கொடுப்பதால் எனக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. என் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகத்தான் ரசிகர்கள் என்னுடைய காரின் மீது ஏறினார்கள்.
அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பர் நடிகர் சந்தானம் எனக்கு உதவி செய்வார். எனக்கு தெரிந்த 10 இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களும் எனக்கு உதவுவார்கள். ரிவ்யூ பிடிக்கவில்லை என்றால் நான் வரமாட்டேன். ரசிகர்கள் எதற்காக என்னைத் தாக்க வேண்டும். அவர்கள் தான் எனக்கு பாதுகாப்பு. நான் என்ன துரோகம் செய்தேன். என்னை பற்றி தயவுசெய்து அவதூறாக பேசாதீங்க என்று கூறியுள்ளார்.