சுவிட்சர்லாந்தில் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. Vaud மாகாணத்தில் அமைந்திருக்கின்ற பணிசறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி உள்ளது. அந்த ஹோட்டல் மிகவும் உயரமான மற்றும் வாகன போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தான் அவர்களால் தீயை அணைக்க முடிந்துள்ளது. மேலும் தீப்பற்றும் போது ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் அந்த ஹோட்டலின் மேல் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. ஹோட்டலில் தீ பற்றியது எப்படி என்பதை கண்டறிவதற்காக போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
சுவிட்சர்லாந்தில் பிரபல ஹோட்டலில் திடீரென எரிந்த தீ… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!
