Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுபவிக்க முயன்றான்…. ”வெட்டி கூறுபோட்டேன்” மகன் கொலையில் தாயின் வாக்குமூலம் …!!

மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் கடந்த 16ம் தேதி இரவு ஆண்-பெண் இருவர்  சைக்கிளில் வந்து ஒரு சாக்கு மூட்டையை போட்டு உள்ளனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசாருக்கு சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் துண்டு தொண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை தொடங்கினார்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்படடன. மேலும் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர் கொடுத்த தகவலின் படி முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போலீஸ் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் போலீசாருக்கு சாக்கு மூட்டையை வீசி சென்றது யார் என்று தெரியவந்தது. அதில் கம்பம் பகுதியில் உள்ள நந்தகோபாலன் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி செல்வி மற்றும் அவரது மகன் விஜய பாரத் தான் இந்த மூட்டையைப் போட்டு சென்றது சிசிடிவி கேமராவால் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மூட்டையில் கட்டி கொண்டு வந்து வீசப் பட்ட சடலமும் செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரனுடையது என்ற தகவல் போலீசாருக்கு போலீசாரை அதிர வைத்தது. மேலும் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட கிடுபிடி விசாரணையில் பொறியியல் படித்த விக்னேஸ்வரன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கஞ்சா , போதை , மது பழக்கத்திற்கு அடிமையான இவரால் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிற்பகல் தாய் செல்வியிடம் விக்னேஸ்வரன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இளைய மகன் மற்றும் தாய் சேர்ந்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கொலை செய்ததற்காக மாட்டிக் கொள்ளக்கூடாது என்று உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டு , வீட்டில் வைத்தே தலை , கை , கால்கள் என அனைத்தையும் துண்டு துண்டாக வெட்டி உள்ளனர்.

அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கொடூரமாக சிதைத்துள்ளனர். பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக சாக்குமூட்டையில் வைத்து கம்பத்தை சுற்றியுள்ள வெவ்வேறு பகுதியில் வீசியதாக தாயும் , இளைய மகனும் போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குற்றவாளிகளான தாயும் , மகனும் அளித்த வாக்குமூலத்தின் படி , வீரநாயக்கன்குளம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த விக்னேஷ்வரனின் தலையை போலீசார் நேற்று மீட்டனர். அதனைத் தொடர்ந்து கூடலூர் செல்லும் வழியில் இருக்கும்  மின்வாரிய அலுவலகத்திற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றில் கை, கால்கள் மீட்கப்பட்டுள்ளது. தவறாக நடக்க முயன்ற மகனை கொடூரமாக கொலை செய்ததில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கின்றதா ? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |