Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே! விபத்தில் சிக்கிய டைட்டானிக் பட ஹீரோயின்…. மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் கடும் ஷாக்….!!!

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேட் வின்ஸ்லெட். இவர் தற்போது அவதார் 2 அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது லீ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதனால் கேஸ் வின்ஸ்லேட்டுக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |