பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து. தற்போது மெல்ல மெல்ல மீண்டும் கொண்டிருக்கிறது. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம் வறுமை பசி பட்டினி, சமத்துவம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக நாடுகள் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த நெருக்கடிகள் ஏதோ சந்தர்ப்பங்களால் உருவானவை அல்ல ஆனால் இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக அமைதிக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலாவை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொது சபையில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.