சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது இடங்களிலும், சாலைகளில் நடந்து செல்லும் போதும் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நமது கவனம் செல்போனில் இருப்பதால் நமக்கு வரும் ஆபத்தை கூட கவனிக்காமல் விபத்தில் சிக்கிக் கொள்கிறோம்” என்று பதிவிட்டு ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.