Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில் பருவ தேர்வு நடைபெறுகிறது.தேர்வுகள் செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் விடுமுறைகளில் மாற்றம் இருந்தால் தேர்வு முடியும் போது அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |