மாநாடு, மன்மத லீலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புது படம் “என்சி22”. இந்த படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக “என்சி22” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
அத்துடன் இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, என்சி22 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இதனை இயக்குனர் வெங்கட்பிரபு தன் சமூகவலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
— venkat prabhu (@vp_offl) September 20, 2022