இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இவற்றில் நடிகர் தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச் சந்திரன் நடிக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன்பின் ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
https://twitter.com/ArunMatheswaran/status/1572103421431513093?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1572103421431513093%7Ctwgr%5E110395b9162aa0bc4abbe00ec09b70de9446ca90%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2F
வரலாற்று பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இவற்றில் டாக்டர், டான் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மேலும் ஒருநடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதில் மகளிர் மட்டும், சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், சுழல் ஆகிய படங்களில் நடித்த நிவேதிதா சதிஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.