தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு விதமான நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததில் இருந்து மோசடிகளும் அதிகரித்துவிட்டது. நம்முடைய செல்போன் நம்பருக்கு ஏதாவது ஒரு குறுந்தகவலை அனுப்பி அதன் மூலம் நெடிப்பொழுதில் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகின்றனர். இந்த ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக வங்கிகளும் காவல்துறையினரும் பொது மக்களுக்கு பல்வேறு விதமான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.
இருப்பினும் ஆன்லைன் மோசடிகள் குறைந்த பாடில்லை. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் சேர்ந்த விபுல் என்ற நபரின் செல்போன் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜை விபுல் கிளிக் செய்த உடன் அவருடைய வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரம் பணம் மாயமாகிவிட்டது. இது குறித்து விபுல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக 36 ஆயிரத்து 996 புகார்கள் வந்துள்ளது.
இதில் 15,057 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்ட நிலையில், 24,084 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோடு செல்போனுக்கு முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து குறுந்தகவல் வந்தால் 1930 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். மேலும் உங்களுடைய செல்போனுக்கு வரும் முன்பின் தெரியாத நபர்களின் குறுந்த தகவல்களை கிளிக் செய்யாமல் இருப்பதோடு, otp நம்பர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட எந்த விவரங்களையும் முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.