ராமராஜன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இது வேற மாதிரியான ரூட்டில் சென்றிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரம் என்னமோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். இந்த படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை.
எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று பேசினார்.