சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராமின் மறைவுக்கு முக.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளமாகவும் , அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிவானந்த குருகுலம் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராம் அவர்களின் இறப்பு பெரும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் , முதியவர்கள் என பலருக்கும் ஆதரவு கரமாக இருந்து மறு வாழ்வு அளித்தவர்.
என்னுடைய பிறந்த நாளில் அவரது குருகுலத்துக்கு சென்று நிதி உதவி வழங்கி இருக்கின்றேன். ராஜாராம் அவர்களின் தூய தொண்டையும் , சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன். அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று மு க ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.