Categories
டெக்னாலஜி

இனி வாட்ஸ்அப் மெசேஜை டெலிட் பண்ண வேண்டாம்…. வரப்போகும் புது அப்டேட்….!!!!

ஒருவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி வாயிலாக அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போல் இன்றி, இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயனர்களின் வசதிக்கேற்ப புதுபுது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒளிப்பதிவு செய்யும் போது நிறுத்தி மீண்டுமாக பதிவு செய்வது ஆகிய அப்டேட்கள் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவை மட்டுமல்லாது பயனாளிகளின் தனி உரிமையை பாதுகாக்கும் விதமாக பல அப்டேட்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. இந்த நிலையில் வித்தியாசமான புது அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, மாற்றிக் கொள்ளும் (Edit) அடிப்படையில் புது அப்டேட்டை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அனுப்பிய குறுஞ்செய்தியை இனிமேல் அழிக்கவோ, தவறு என குறிப்பிடவோ வேண்டாம். குறுஞ்செய்தி அனுப்பியவரே அவற்றை எடிட் செய்து கொள்ளலாம்.

அத்துடன் எடிட் செய்தால் அதன் மேலே எடிடட் என சுட்டிக்காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இது இப்போது பீட்டா வெர்ஷனாக சிலரின் பயன்பாட்டுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வசதியை பெற வாட்ஸ்அப் பயனாளர்கள் அப்டேட் வெர்ஷனை பயன்படுத்த வேண்டும் எனவும் ஒருவர் எடிட் செய்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தால் அப்டேட் செய்யாத பயனாளருக்கு அந்த குறுஞ்செய்தி காட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த குறுஞ்செய்தியை படிக்க அவர் கண்டிப்பாக அப்டேட் செய்தாக வேண்டும் என்பது வாட்ஸ்அப்பின் வழிமுறைகளில் ஒன்றாகும். ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு, எவ்வளவு மணி நேரம் வரை அதனை எடிட் செய்யலாம் என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |