Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRules : ‘மன்கட்’ செய்யலாம்….. எச்சிக்கு நோ….. இனி இப்படித்தான் ஆட வேண்டும்…. விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள்… இதோ..!!

அக்டோபர் 1ம் தேதி முதல் கிரிக்கெட் விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி, MCC இன் புதுப்பிக்கப்பட்ட 2017 கிரிக்கெட் சட்டங்களின் 3வது பதிப்பில் விளையாடும் நிலைமைகளில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகளை அங்கீகரித்த மகளிர் கிரிக்கெட் கமிட்டியுடன் முடிவுகள் பகிரப்பட்டன. புதிய விளையாட்டு நிபந்தனைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும், அதாவது அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்த விதிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்..

1. கிராஸ் செய்தாலும் புதிதாக வரும் பேட்டர் தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் :

ஸ்ட்ரைக்கில் இருக்கும் ஒரு பேட்டர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும் போது,  கேட்ச் எடுக்கப்படுவதற்கு முன்பு பேட்டர்கள் இருவரும் கிராஸ் செய்து விட்டார்களா என்பதை முன்பு பார்ப்பது வழக்கம்.. ஏனென்றால் கேட்ச் எடுக்கப்படுவதற்கு முன்பு பேட்டர்கள் கிராஸ் செய்தால், நான்-ஸ்ட்ரைக்கர் அடுத்த பந்தில் ஸ்ட்ரைக் எடுப்பார்.  அதே நேரத்தில் புதிய பேட்டர் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் இருப்பார். புதிதாக உள்ளே வரும் பேட்ஸ்மேன் நேரடியாக ஸ்ட்ரைக் எடுப்பதை தவிர்க்க இந்தமுறை உதவும். ஆனால் தற்போது அந்த முறைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பேட்டர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து செல்லும் போது ஒருவரை ஒருவர் கடந்து இருந்தாலும், கடக்காமல் போனாலும் புதிதாக வரும் பேட்டர் தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும்..

பந்தை மெருகூட்டுவதற்கு உமிழ்நீரைப் பயன்படுத்த தடை :

கோவிட்  காலகட்டத்தில் வைரஸ் பரவுவதை தடுக்க தற்காலிக நடவடிக்கையாக பந்தினை பாலிஷ் செய்ய எச்சில் பயன்படுத்தக்கூடாது என சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தடை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த தடை நிரந்தரமாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வீரர்கள் பந்தை பாலிஷ் செய்ய உமிழ் நீரை பயன்படுத்த முடியாது.

பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் உள்வரும் பேட்டருக்கு நேரம் குறைப்பு :

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் உள்ளே புதிதாக வரும் பேட்டர் 2 நிமிடங்களுக்குள் ஸ்டிரைக் எடுக்க தயாராக இருக்க வேண்டும், அதே சமயம் டி20களில் 90 வினாடிகள் என்ற தற்போதைய வரம்பு மாறாமல் உள்ளது. முன்னதாக, உள்வரும் பேட்டருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் எடுக்க 3 நிமிடங்கள் இருந்தன, ஆனால் இப்போது அது குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், பீல்டிங் கேப்டன் நேரம் முடிந்ததற்காக மேல்முறையீடு செய்யலாம்.

ஃபீல்டிங் பக்கம் தவறு செய்தால் பேட்டர்களுக்கு 5 ரன்கள் :

பந்து வீச்சாளர் பந்துவீசுவதற்கு ஓடிக்கொண்டிருக்கும் போது நியாயமற்ற மற்றும் வேண்டுமென்றே பேட்டர்களின் கவனத்தை குலைக்கும் வகையில் நகர்த்தினாலும், இப்போது நடுவர் பேட்டிங் பக்கத்திற்கு 5 பெனால்டி ரன்களை  வழங்கலாம்.

நான்-ஸ்ட்ரைக்கரின் ரன் அவுட்:

பந்து வீச்சாளர் பந்து வீச வருவதற்கு முன்னதாகவே நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்டர்கள் கிரீசை விட்டு வெளியே வந்து ரன் ஓட தயாராக இருப்பார்கள். இதனை பந்துவீச்சாளர் கவனித்தால் அவரை ரன் அவுட் செய்யலாம். இருப்பினும் இந்த முறை நியாயமற்றதாக அனைவராலும் பார்க்கப்பட்டது. உதாரணமாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாஸ் பட்லரை இந்த ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அவுட் அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

பந்து வீச்சுக்கு முன் ஸ்டிரைக்கரின் முடிவை நோக்கி பந்துவீச்சாளர் பந்து வீசினால் டெட் பால் :

முன்னதாக, பந்து வீச்சாளர் தனது பந்தை வீசுவதற்கு முன், பேட்டர் கிரீசை விட்டு முன்னேறி விக்கெட்டுக்கு கீழே முன்னேறிச் செல்வதைக் கண்டால் பந்து வீச்சாளர், ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்ய பந்தை வீசலாம். ஆனால் இந்த நடைமுறை இப்போது டெட் பால் என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய முடிவுகள்:

ஜனவரி 2022 இல் டி20 களில் இன்-மேட்ச் பெனால்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் திட்டமிடப்பட்ட இடை நிறுத்த நேரத்திற்குள் ஒரு பீல்டிங் குழு தங்கள் ஓவர்களை வீசத் தவறினால், இன்னிங்ஸின் மீதமுள்ள ஓவர்களுக்கு கூடுதல் பீல்டிங் வட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். 2023 இல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளிலும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அணிகள் மெதுவாக ஓவரை வீசுவதன் காரணமாக போட்டி தாமதமாகிறது, இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான 2022 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டி ஒரு எடுத்துக்காட்டு.

கங்குலி அனைத்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டினார். கங்குலி கூறியதாவது, ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் எனது முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கியது பெருமையாக உள்ளது,” கமிட்டி உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இதன் விளைவாக முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டன.அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் மதிப்புமிக்க உள்ளீடு மற்றும் பரிந்துரைகளுக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.

Categories

Tech |