தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் காபி வித் கரண் எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திரைபிரபலங்களிடம் விவாதிக்ககூடிய நகைச்சுவை கலந்த இந்நிகழ்ச்சியை இயக்குனர், நடிகர் உட்பட பன்முக தன்மைகளை கொண்ட கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் எபிசோடில் நடிகர் ஷாருக் கானின் மனைவி கவுரி கான் பங்கேற்ககூடிய நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் “பாலிவுட் திரை நட்சத்திரங்களின் மனைவிகளின் உயர்தர வாழ்க்கை” என்ற நிகழ்வில் ஒன்றாக நடித்துள்ள கவுரி மற்றும் அவரது தோழிகளான மஹீப் கபூர், பாவனா பாண்டே போன்றோரும் பங்கேற்கின்றனர்.
இந்த 3 பேரும் பல வருடகால தோழிகள் ஆவர். இவர்களது குழந்தைகளான சுகானா கான், ஷனாயா கபூர் மற்றும் அனன்யா பாண்டே போன்றோரும் சிறுவயது முதலே தோழிகளாக வளர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியில் கவுரி கானிடம் நிகழ்ச்சியை நடத்தும் கரண் கேட்ட கேள்வி ஒன்றில், உங்களது மகள் சுகானாவுக்கு டேட்டிங் செல்லும் போது என்ன அறிவுரை வழங்குவீர்கள்..? என அமைந்திருந்தது. அப்போது கவுரி கான், ஒரே சமயத்தில் 2 பேருடன் டேட்டிங்கில் ஈடுபடாதே என்பேன் என கூறுகிறார்.
இதைகேட்டு கரண் நிறுத்த முடியாத அளவுக்கு சிரிக்கிறார். அத்துடன் கவுரியும் சிரித்துகொள்கிறார். ஷாருக்கான் மற்றும் உங்களுக்கு இடையிலான அன்பு கதையை விவரிப்பதற்கு சரியான, திரைப்படத்தின் பெயர் எதுவாக இருக்கும் என கரண் கேட்டுள்ளார். அதற்கு தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என கவுரி பதில் அளிக்கிறார். நானும் அதை விரும்புகிறேன் என கரண் கூறுகிறார். இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் கரண் வெளியிட்டுள்ளார். அதனை 1 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்துள்ளனர்.