திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல அறையில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் 70 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் வேகத்தை அதிகரிக்க அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்கள், அதிர்வுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 70 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்த ரயிலின் வேகம் தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பிறகு 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறைவதோடு, அதி விரைவு விரைவுகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என கூறியுள்ளனர்.