டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் முதலமைச்சராக இருக்கின்ற போதே பாரத பிரதமருடைய கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஒன்று கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே பல்வேறு முறை பாரத பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்தோம். அதையும் அவர் பரிசீலிப்பதாக சொன்னார்கள். தற்போது அது டி.பி.ஆர் ஸ்டேஜ்ல இருப்பதாக அறிகின்றேன். அதை வேகப்படுத்தி, துரிதப்படுத்தி, அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்களிடத்திலே கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் 11ஆம் தேதி ஓபிஎஸ் என பத்திரிக்கையாளர் கேள்விகேட்டுக் கொண்டு இருக்கும் போதே ”சாரி வணக்கம்” என கூறி கிளம்பினார். டெல்லிக்கு சென்றபோது உற்சாகமாக இருந்த இபிஎஸ் டெல்லியில் அமித்ஷா அவர்களை சந்தித்து விட்டு மீண்டும் திரும்பும் போது அந்த உற்சாகம் அவரது முகத்தில் இல்லை. முகம் மிக வாட்டமாக இருந்தது. அவர் மட்டுமல்லாமல் அவருடன் சென்றிருந்த வேலுமணி ,சண்முகம் ஆகியோரின் முகமும் வாட்டமாக இருந்தது
இதை பார்த்த பலரும் தற்போது கட்சியில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரத்தில் அமித்ஷா அவர்கள் இவருக்கு சாதகமாக எந்த ஒரு விஷயத்தையும் பேசியிருக்க மாட்டார் என்று சந்தேகம் எழுகின்றது. எப்போதும் கலகலப்பாக பேசும் எடப்பாடி அவர்கள் மிகவும் அமைதியாக சோகத்துடன் பேசுவது போல் தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அவர் தைரியமாக பதில் பேசி இருந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எதுவும் பேசாமல் அங்கிருந்து கடந்துவிட்டார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது டெல்லியில் ஏதோ நடந்துள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.