ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இந்த மனு சட்டத்துல தான் இதனையாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிச்சு வச்சு இருக்கீங்களே என சொன்னேன். நானா சொன்னேன், 19-12-1973இல் பெரியார் பேசி இருக்கின்றார் என்று கூறிய ஆ.ராசா பெரியார் இறுதியில் கலந்து கொண்டு பேசிய மேடையில் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை படிச்சு காட்டினார்.
புத்தகத்தில் பெரியார் பேசியதாக ஆ.ராசா படித்துக்காட்டியது வருமாறு: சூத்திரர் என்ற பட்டம் ஒழிய வேண்டும் என்ற கடைசி போரில், பெரியார் பேசுகிறார். நாங்க இந்த பிரச்சனையில் கடவுளை வணங்காதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுளை என்னன்னு சொல்லுங்க அவ்ளோதான்னு சொல்றேன். ஒன்னும் இல்லாம எந்த முட்டாளாவது சொன்னான் என்றால், நினைத்ததெல்லாம் அரசமரம் கடவுள், வேப்பமரம் கடவுள், பல்லி கடவுள், ஓடக்காண் கடவுள், ஓனான் கடவுள், பாம்பு கடவுள் அப்புறம் நினைத்ததெல்லாம் கடவுள். என பைத்தியக்காரன் சொல்லுறதுக்கு நம்ம நேரம், பணம், அறிவு நாசமாகுது.
ஆகவே எந்த சங்கதி எப்படி ஆனாலும், நாம் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்பு ”சூத்திரன் என்கின்ற பட்டம்” போக வேண்டும். சூத்திரன் பட்டம் போக வேண்டும் என்பதற்காக, இழிவு ஒழிப்பு கிளர்ச்சி காரியம் மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாள் ஆகிறது. எட்டாம் தேதி மாநாடு. இன்று பத்து நாள் ஆகிறது. நல்லா கவனிக்கணும்… ரகசியம் அல்ல. பத்தாயிரம் பேருக்கு மேல் வந்தார்கள், 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள், எல்லா தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகைகளில் போட்டார்கள்.
இந்தியா முழுவதும் பரவியது, அடுத்த நாளே பரவியது… நான் சொல்றேன் கவனிங்க, இந்த பத்து நாளில் ஒருவனாவது இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினானா? நாம் செய்தது எவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஏற்க முடியவில்லை. எவன் தைரியமாக சொல்லுவான். அவ்வளவு நேர்மையான காரியத்தை செய்திருக்கிறோம். நாளைக்கு இதற்கு பரிகாரம் பண்றதுக்கு கிளர்ச்சி பண்றோம்னு அதுல தான் நாம யாருன்னு காட்டிக்கணும்.
5000 பேர், பத்தாயிரம் பேர் நாம ஜெயிலுக்கு போறோம். காரியம் முடிற வரைக்கும் நம்ம ஜெயிலில் இருக்க தயாரா இருக்கிறோம்னு காட்டணும். அவன் பரிகாரத்துக்கு வரணும், வரலைனா… இந்த சாக்கா வச்சு, நீ போடா வெளியே… உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் ? நீ 2000 மைல், 1500 தூரம் வடக்கு இருந்து வந்த, உன் பேச்சு சமஸ்கிருதம் எனக்கு புரியாது. என் பேச்சு உனக்கு புரியாது. உன் பழக்கம் வேற, ஏன் பழக்கம் வேற. உன் நடப்பு வேற, ஏன் நடப்பு வேற எனக்கு தெரியாது.
மரியாதையா போ, ரகளை வேண்டாம். எதுக்கு அவ்வளவு தூரம் இருந்து என்ன வந்து ஆள்ற ? நீ இல்லனா எங்களுக்கு என்ன நஷ்டம் ? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா ? தண்ணி இல்லையா ? மழை இல்லையா ? காடு இல்லையா ? சமுத்திரம் இல்லையா ? நெல்லு இல்லையா? கம்பு இல்லையா ? என்ன இல்லை. எங்களுக்கு உன்னால என்ன ஆகுது ? நீ எங்களுக்கு பண்ண நன்மை என்ன ? மரியாதையா போ என பெரியார் பேசியதாக படித்து காட்டிய ஆ.ராசா, இது எப்படி தப்பாகும் என பெரியார் கடைசியாக பங்கேற்று பேசிய மாநாட்டு பேச்சு வார்த்தைகளை ஆ.ராசா படித்துக் காட்டினார்.