Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ஓராண்டிற்கு இந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் மராமத்து பணிகள் மற்றும் ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்நிலையில் குடிநீர் வாரிய இயக்குனர் உள்ள புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் நீர் இருப்பு போதுமானதாக உள்ளதாக தகவல் தெரிவித்தார். எனவே அடுத்த ஓராண்டில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு சென்னை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம் ஆழ்துளை கிணறுகளில் நீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.இனிவரும் காலங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |