திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-ஆபிஸ் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இ-ஆபிஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தலைமைச் செயலகத்தில் 3425 பணியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியே குறைக்க இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சேவைகள் இ-சேவை மையங்களுடன் இணைக்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து இ-ஆபிஸ் திட்ட மூலம் அரசின் வருவாய் மிச்சப்படுகிறது. காகிதம் இல்லா இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்துவதன் மூலம் திருப்பூரில் மட்டும் 31 டன் காகிதத்திற்கான செலவு சேமிக்கப்படுகிறது. அரசு இ-சேவை மையங்களில் ஏற்படும் தாமதம் குறைக்கப்பட்டு வருகிறது.அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்படுவதன் மூலம் எந்த அலுவலகத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை கண்டறி வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாமதம் இல்லாமல் அனைவருக்கும் சேவை கிடைக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த ஆட்சியில் தற்போது உள்ள இ-சேவை மையங்கள் போல முறைப்படுத்தப்படவில்லை. கிராமப்புறங்களில் போதுமான மென்பொருட்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பதவியேற்று ஒரு வருட காலத்தில் கூடுதலான மென்பொருட்களும் பதிவேற்றப்பட்டு இ-சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் உள்ள மென்பொருட்கள் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் முறையாக செயல்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.