ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என பல்வேறு நாடுகளும் அறிவித்து விட்டன..
இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் ஃபின் ஆலன் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் மார்ட்டின் கப்திலும் அணியில் இணைந்துள்ளார்.
மார்ட்டின் கப்தில் 7ஆவது முறையாக டி20 உலகக் கோப்பைக்காக தேர்வானதால், டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், முகமது மஹ்முதுல்லா மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் பிரத்யேக வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். ஷகிப் அல்-ஹசன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 8ஆவது டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தயாராக உள்ளனர். நாதன் மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் 6 டி20 உலகக் கோப்பைகளில் விளையாடிய மற்ற நியூசிலாந்து வீரர்கள் ஆவர்.
நியூசிலாந்து அணி முதலில் அக்டோபர் 7ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுடன் டி20 முத்தரப்பு தொடரில் மோதுகிறது. நியூசிலாந்து அணி அக்டோபர் 15 அன்று ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன் ஹாக்லி ஓவலில் 8 நாட்களில் ஏழு போட்டிகள் கொண்ட முத்தரப்புத் தொடரில் பங்கேற்கிறது..
டி20 உலகக் கோப்பை மற்றும் முத்தரப்பு தொடருக்கான நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ் , மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி.
Our squad for this year's @T20WorldCup in Australia. Details | https://t.co/JuZOBPwRyn #T20WorldCup pic.twitter.com/1s4QBL5bGH
— BLACKCAPS (@BLACKCAPS) September 19, 2022