செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, என். எஸ் பெருங்காய கழகம் அருகே இருக்கின்ற உயர்மட்ட பாலம் மாண்புமிகு எடப்பாடியார் 50 கோடி திட்டத்தில் கொண்டு வந்த பாலம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் மாண்புமிகு எடப்பாடியார், இன்றைக்கு முதல்வர் திறந்து வைக்கிறார் அதில் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அதையும் திறக்காமல் மூடிவிட்டார்கள் என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் அத்தனை வகையிலும் இன்றைக்கு அண்ணா திமுக செய்த சாதனைகளுக்கு அவர்கள் திறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து ஏதாவது புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். மதுரையில் நிதிநிலை அறிக்கை என்பது பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள், எந்த திட்டமும் இதுவரை நடந்த பாடு இல்லை. இங்கே இருக்கின்ற ஒரே ஒரு நூலகத்தை தவிர வேறு எந்த திட்டமும் மதுரைக்கு செயல்பாட்டிற்கு வரவில்லை, அறிவிப்புகளோடு நிற்கிறதே தவிர எந்த ஒரு திட்டமும் ஒரு 15 மாதம் ஆகிவிட்டது ஆட்சி பொறுப்புக்கு வந்து, எந்த ஒரு திட்டமும் மதுரைக்கு எந்த செயல்பாட்டிற்கு வரவில்லை என்பது நாங்கள் உங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்திருக்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை. அந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் மாண்புமிகு இந்திய பிரதமர், தொடர்ந்து அதற்காக ஜப்பான் நிறுவனத்தோடு ஒரு உடன்படிக்கை செய்ய வேண்டிய சூழ்நிலை, அந்த உடன்படிக்கைக்கான உத்தரவை, அதற்கான பணத்தை தமிழக அரசு மாண்புமிகு எடப்பாடி இருக்கின்ற போதே இந்த நிலத்தை ஒப்படைப்பு செய்து விட்டோம்.
அதற்குரிய 200 ஏக்கரை நில ஒப்படைப்பு நிறுவனத்துக்காக செய்யப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் பண ஒதுக்கீடு மிகக்குறைந்த பணம் மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய பணம், இது குறித்து நாங்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, ஒரு வருடங்களுக்கு முன்னதாகவே மத்திய அமைச்சருக்கு சுகாதாரத்துறை அமைச்சருக்கு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அமைச்சர் ஆகியோரிடம் இருந்து உரிய பதில் வந்திருக்கிறது.
ஒரு நிர்வாகத்தின் கீழ் வந்தால் தான் செயல்படுத்த முடியும் என்ற வேண்டுகோளை விடுத்தேன், அதற்கான பதிலில் அவர்கள் விரைவில் செய்ய முடியும் என்று சொன்னார்கள். இப்போது கூட எல்லாவற்றையும் நீங்கள் கேட்கின்ற கேள்விகளை தொகுத்து மத்திய அமைச்சருக்கு இன்னொரு கடிதம் எழுதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எனக்கு அனுப்பிய பதில் கடிதம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் விரைவில் அதற்கான பணிகளை செய்து பதில் கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள், அந்த கடிதங்களை கூட உங்களிடம் சமர்ப்பிக்க தயாராகஇருக்கிறேன். அந்த கடிதங்களின் அடிப்படையில் மிக விரைவில் அவர்கள் பணியை கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.