Categories
மாநில செய்திகள்

தப்ப முடியாது…! காலை உணவுத் திட்டம் சரியாக செயல்படுகிறதா….? நேரடியாக கண்காணிக்கும் முதல்வர்…!!!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ‘சிஎம் 13எஃப் எஸ்’ என்ற செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலினே நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இந்த செயலியின் மூலம் சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |