Categories
மாநில செய்திகள்

நல்ல மனுஷன்யா நெப்போலியன்…! வேலைக்கேட்ட இளைஞ்சர்கள்… புதிய கம்பெனியே தொடங்கி கலக்கல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், எங்கள் நிறுவனமான ஜீவன் டெக்னாலஜி உடைய 23-வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி. 22 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. 2000தில்  ஆரம்பிச்சோம்,  ஜீவன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை…. 2000 ஆண்டு நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சார் தலைவராகவும், நான் துணைத் தலைவராகவும்,  சரத்குமார் சார் செக்கரட்டரியாவும் இருந்தோம்.

அந்த பொறுப்புக்கு வரும்போது நிறைய இளைஞர்கள் என்கிட்ட வந்து வேலை வாய்ப்பு கேட்டாங்க. அப்போம்  நான் சொன்னேன், யப்பா  நாங்க நடிகர் சங்கத்தில் பொறுப்பு எடுத்து இருக்கிறோம். இங்க வந்து வேலை கேட்டீங்க, அப்படின்னா எப்படி வேலை கொடுக்க முடியும்? வேணும்னா மெம்பர் ஆக்குகிறேன். எப்படியாவது கஷ்டப்பட்டு நடிச்சு, பெரிய ஆளாக வா அப்படின்னு சொன்னேன்.

அப்புறம் 2001-இல் வில்லிவாக்கத்தினுடைய தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். அப்புறம் நாங்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தோம். ஜெயலலிதா அம்மா தான் ஆளும் கட்சியாக இருந்தார்கள். தலைவர் கலைஞர் வந்து இருந்தாலும், அவர் வந்து நாங்க குறைந்த எண்ணிக்கையில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து சட்டமன்றத்தில் பணிகள் ஆற்ற வேண்டும் என்று கட்டளை இட்டார்.

அதன் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து சட்டமன்றத்துக்கு போனோம். தொடர்ந்து மக்கள் பணியாற்றினோம். அப்போம் இதே மாதிரி இளைஞர்கள் வந்து கவர்மெண்ட்ல ஏதாவது வேலை வாங்கி கொடுங்க, வேலை வாங்கி கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. நான் சொன்னேன் ஆளும் கட்சியாக இருந்தால் மந்திரிகள் கிட்ட நாம சொன்னா கேட்பாங்க. இப்போ எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. சொன்னா எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவாங்கன்னு தெரியாது.

அப்படின்னு சொன்னாலும்,  எனக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி வேலைவாய்ப்பு வாங்கி கொடுத்தேன். அப்போ பிரைவேட் நிறுவனத்தில் சொல்லுங்க என சொல்லுவாங்க. அப்போது எனக்கு நெருங்கிய நண்பர் ஒருத்தர் சொன்னாரு, நீங்களே ஒரு கம்பெனி ஆரம்பிச்சு,  எல்லா கம்பெனிக்கும் மேன்பவர் கொடுத்தா என்ன ? கன்சல்டிங் பண்ணா என்ன ? என சொன்னாரு. அப்போ நான் கேட்டேன் கன்சல்டிங் அப்படின்னா என்னன்னு ?

எல்லாத்துக்கும் நீங்க வேலை வாய்ப்பு கொடுக்கிறது. உங்கள் கம்பனியில் இருந்து அந்த கம்பனிக்கு வேலைக்கு ஆள் கொடுக்கலாமே என சொன்னாரு. அதன் அடிப்படையில் தான் நான் ஜீவன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை 2000ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பித்தேன்.

அப்போ நான் மத்திய அமைச்சராக இருந்ததினால் 4ஆண்டுகள் கம்பெனியை சரியா பாக்க முடியல. திருப்பி 2014 -இல்ல  நான் பொறுப்பு எடுத்து,  திருப்பி ஒரு நல்ல நிலைமையில் கம்பெனியை கொண்டு வந்து, அமெரிக்காவில் இன்னைக்கு நிறைய பிஸ்னஸ் எடுக்கிறோம்.

அங்கிருந்து எடுத்து வந்து,  இங்கு டெவலப் பண்ணி திருப்பி அமெரிக்காவுக்கே அனுப்புறோம். இங்க நிறைய நம்ம நாட்டு மக்களுக்கு, இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கொடுக்கிறோம்.

இன்னைக்கு நிறையா இளைஞர்கள் ஆர்வமா கம்பெனில வேலை செய்வதற்கு ரெடியா இருக்காங்க. ஆனா இந்த கோவிட்  வந்ததுனால இரண்டு ஆண்டு காலமாக எல்லாருமே வந்து ஒர்க் ப்ரம்  கோம் மாதிரி ரிமோட்டிலேயே பணியாற்றுறாங்க.

பின்னர் இப்போது தான் வேலை சென்றுகொண்டு இருக்கின்றது. எனவே ஒரு கெட்டுகெதர் வைப்போம் என சொல்லி, எல்லா ஊர்ல இருந்தும் பணியாளர்களை வரச் சொல்லி, இரண்டு நாள் ஹோட்டல்ல தங்க வச்சு, அவர்களை ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆக  ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Categories

Tech |