Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் மீது எப்போதும் அக்கறை உண்டு”….. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 4-வது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நேற்று தொடங்கியது. அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கண்ணும் கருத்துமாக கலைஞர் பார்த்துக் கொண்டார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் மீது எப்போதும் திமுகவுக்கு அக்கறை உண்டு.

மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரை சூட்டியவர் கலைஞர் தான். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் ஆற்றல் மிகுந்தவர்கள் நீங்கள். உங்களது குறைகளை தீர்க்கும் கருவி போல உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |