மேஷம் ராசி அன்பர்களே, இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இன்று புதிய நபர்களின் நட்பும் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை சிறப்பாக செய்வதில் மட்டும் கவனம் இருக்கட்டும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாகவே அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும், படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 8 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீலம் நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாளாகவே இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வீடு கட்டும் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடனுதவி வந்துசேரும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் தவிர்ப்பது ரொம்ப நல்லது.
பணம் கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப கவனம் வேண்டும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக செய்யுங்கள், யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாகவே செல்லுங்கள். நிதானத்தை கடை பிடித்தால் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும்.
பாடங்களை மட்டும் கவனமாகப் புரிந்து கொண்டு படியுங்கள், ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அவரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாகவே இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மேன்மையும் உயர்வும் கிட்டும். நீண்ட நாளைய பிரச்சினை ஒன்று நல்ல தீர்வை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது.
பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது ரொம்ப நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும், காலதாமதமும் அவ்வப்போது வந்து செல்லும். மற்றவர்களுக்காக எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ளாமல் இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
படித்ததை எழுதிப் பாருங்கள் இன்று சக மாணவர்கள் அன்பாகவே நடந்துகொள்வார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் ஊதா நிறம்
கடகம் ராசி அன்பர்களே, இன்று குழப்பங்கள் அகல கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். ஓய்வின்றி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூட போகலாம். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு இருக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனையே காண்பார்கள். இன்று வீண் வாக்குவாதங்கள், வாக்குறுதிகள் போன்றவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், பேசுவதையும் தவிர்க்கவேண்டும். கூடுமானவரை நீங்கள் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்விக்காக கஷ்டப்பட்டு முன்னேறி செல்வீர்கள். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். கூடுமானவரை நீங்கள் சக மாணவர்களிடம் மட்டும் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உத்தியோக முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். உயர் அதிகாரிகளினால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க வெற்றி காண்பீர்கள். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். மனக்குழப்பம் தீரும், எதையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செய்வீர்கள். பயணங்கள் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும்.
புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள், தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்கள் ஆகவே வரும். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதால், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளிநாடு செல்வதற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். இன்று மாணவர்கள் செல்வங்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
மேற்கல்வி கல்வியிலும் வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கன்னி ராசி அன்பர்களே, இன்று மன மாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை ஆகவே இருங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும், செலவு பன்மடங்கு இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள், ஆசிரியர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள், அவரிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று தொகை வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். பாராட்டும், புகழும் கூடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும், பயணம் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது, பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுதும், மின் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுதும் ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். இன்று மாணவர்கள் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள், நிதானமாக செயல்படுங்கள்.
இன்று விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டை கொண்டு சிறப்பினை காணவேண்டிய நாளாகவே இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகளின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செய்யுங்கள். பணவரவு ஓரளவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு இருங்கள்.
எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும், உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் எதிர்பார்த்தபடியே வந்து செல்லும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். வெளியூர் பயணத்தின் பொழுது உடமைகளின் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும், அதனால் செலவு கொஞ்சம் இருக்கும். யாரிடமும் கோபம் கொள்ளாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் அன்புத்தொல்லை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
இன்று மாணவர்கள் முழுமூச்சுடன் பாடத்தை படியுங்கள், அதில் வெற்றியும் பெறுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்,
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம் நிறம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும், ஆதாயம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டாம். அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும். மனசோர்வு கொஞ்சம் ஏற்படும். தொழிலில் பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல்கள் வந்துசேரும்.
இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் பண கடன் வாங்க வேண்டி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபம் கொஞ்சம் குறையலாம். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடும்.
மேற்கல்வி காண முயற்சியிலும் வெற்றி பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகள் பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும், விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலைதூக்கும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள்.
எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவரிடம் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள், மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல்கள் உங்களுக்கு சாதகமாகவே வரும். பணவரவை பொருத்தவரை எந்த வித தடங்கலும் இல்லை. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
படித்ததை எழுதிப் பாருங்கள், ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாகவே இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும்.
அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்களிடம் சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளுவது நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையே காணப்பட்டாலும், வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். இன்று ஆன்மீகத்தில் சிறு தொகையை செலவிட வேண்டியிருக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டி இருக்கும். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள்.
படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், சக மாணவர்களிடம் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்