தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,பாஞ்சால குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு கண்டறியப்பட்டால் உடனே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு நடைபெறுகிறதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முறையாக கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதல்வரின் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத் துறையுடன் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.