பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிமுகம் செய்துள்ளது..
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் அணி சமீபத்தில் தான் அறிவித்தது.

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள் :
ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி
𝐓𝐡𝐞 𝐛𝐢𝐠 𝐫𝐞𝐯𝐞𝐚𝐥!
Presenting the official Pakistan T20I Thunder Jersey'22 ⚡
Order the official 🇵🇰 shirt now at https://t.co/A91XbZsSbJ#GreenThunder pic.twitter.com/BX5bdspqt1
— Pakistan Cricket (@TheRealPCB) September 19, 2022
Pakistan Team New Thunder Jersey for T20 World Cup 2022
📷 @TheRealPCB pic.twitter.com/F2hPnH29Ao
— Usman Hashmi (@Usmanhashmi_07) September 19, 2022