விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவிலில் ஏழு சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகரத்துமேட்டில்புகழ் பெற்ற கன்னிமார் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் பூஜைகசெய்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வழக்கம்போல் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்த பொழுது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 சிலைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தார்கள். பின் இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.