Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…கவனம் தேவை..வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று குழப்பங்கள் அகல கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். ஓய்வின்றி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூட போகலாம். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு இருக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனையே காண்பார்கள். இன்று வீண் வாக்குவாதங்கள், வாக்குறுதிகள் போன்றவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், பேசுவதையும் தவிர்க்கவேண்டும். கூடுமானவரை நீங்கள் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்விக்காக கஷ்டப்பட்டு முன்னேறி செல்வீர்கள். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். கூடுமானவரை நீங்கள் சக மாணவர்களிடம் மட்டும் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |